சனி, 14 செப்டம்பர், 2013

கணனியில் சில சுவாரஸ்யங்கள்!

மேட்ரிக்ஸ் எப்படி இருக்கும் என பார்த்துருப்பீர்கள்.இதையே கனினியில் கொண்டு வரலாம்.
அதற்கான சுலபமான வழிகள் இதோ

1.Notepad ஐ அதாவது புதிய Text document திறந்து கொள்ளுங்கள்.
 

2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.
 

@echo off
 
color 02
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start

3.காப்பி செய்த கோட்களை அப்படியே உங்கள் NOTEPAD இல் பேஸ்ட் செய்யுங்கள்.
 

4.பிறகு எதாவது ஒரு பெயர் கொடுத்து (எடுத்துக்காட்டாக 
Matrix effect.bat)என Save செய்யுங்கள்.

மிக முக்கியமாக .bat என்ற extension இல் save செய்ய வேண்டும்.அதற்கு All Files தேர்ந்தெடுத்து 
matrix effect.bat என சேமியுங்கள்.

5.அவ்வளவுதான் double click செய்து இப்போது திறந்து பாருங்கள்
 
மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ்.....

மற்றுமொரு சுவாரஸ்யம்:-

1.உங்கள் கனினியில் Start பட்டனை அழுத்துங்கள்


2.ஆதில் தோன்றும் RUN ஐ க்ளிக் செய்யுங்கள்.

3.கீழே உள்ளவற்றை அப்படியே டைப் செய்யுங்கள் அல்லது இங்கிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
telnet towel.blinkenlights.nl

4.பிறகு ஒகே கொடுத்து
ஆட்டத்தை பாருங்கள்
ஆட்டம் ...களை கட்டும்
பயப்படாம பன்னுங்க மக்களே.!!!

இலவசமாக ஆங்கிலம் கற்க ஓர் சிறந்த இணையத்தளம் !

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.
காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.
என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.
முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.
இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள்.

கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.

குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?

மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.

மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.

உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.
கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.

பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.
பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.

கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.

இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன
இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.

இணையதள முகவரி: http://classbites.com/

உலகில் நீங்கள் எத்தனையாவது இடம் !

 உலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது.

பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம். 

 

உங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்!

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!
அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.

நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ,குணா பட கமல் பாட்டு போல கொஞ்சம் மானே தேனே போட்டு கொள்ளுங்கள் என்று எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.

பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
நிற்க இந்த பதிவு நல்ல பயோடட்டாவை உருவாக்குவது எப்படி என்று வழிகாட்டுவடதற்கானது அல்ல;அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான ரெஸ்யும் பேக்கிங்கை அறிமுகம் செய்வதற்கானது.

பக்காவான ,செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து.அதையும் சுலபமாக,உடனடியாக செய்து தருகிறது.

இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை.அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம் ,கல்வி தகுதி,பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான்.அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன.

பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம்.இது முதல் படி தான்.இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌

ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம்.வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும்.பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து.
  
வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி: http://www.resumebaking.com/

விண்டோஸ் 8க்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள்

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Microsoft Security Essentials:
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது.
இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும்.
AVG:
அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும்.
இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது.
பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இடமான கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது.
தகவல்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது.
Avast:
இதனைப் பெரும்பாலானவர்கள் முன்பே பயன்படுத்தி இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள்.
மிகச்சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டிவைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று.
வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.
Avira:
அவிரா ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.
வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் மட்டுமின்றி விளம்பரங்களாக வரும் ஆட்வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது.
நம் இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது.
தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன் தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது.
Kaspersky Antivirus:
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று.
பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது.
வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது.