வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

Laptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது.

நாம் புதிதாக லேப்டாப் வாங்கும் பொழுது, அதனுடன் அதற்கான Recovery DVD களை தருவார்கள். ஆனால் ஒரு சில லேப்டாப்களுக்கு இந்த DVD களை வாங்கும் பொழுது தருவதில்லை. கேட்டால் 'Recovery partition உள்ளேயே இருக்கு' என்று கூறிவிடுகிறார்கள். மற்றும் சிலர் புதிய லேப்டாப் வாங்கும் பொழுது, இது பற்றி யோசிப்பதில்லை என்பது வேறு விஷயம்.   


இப்படி Recovery Disc தரப்படவில்லை எனில்  பெரும்பாலும் உங்கள் லேப்டாப்பின் வன்தட்டில் Recovery partition என ஒன்று இருக்கும். 


இந்த பார்ட்டிஷனை திறக்க முயற்சிக்கும் பொழுது கீழே திரையில் உள்ளது போல எச்சரிக்கை செய்தி வருவதை கவனித்திருக்கலாம். 


இந்த Recovery Disc அல்லது Recovery partition நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். நமது லேப்டாப்பில் வைரஸ் தாக்குதல், அல்லது வேறு ஏதாவது இயங்குதளத்தை நிறுவலாம் என்ற எண்ணத்தில் முயற்சிக்கும் பொழுது, லேப்டாப்புடன் வந்த இயங்குதளம் மற்றும் டிரைவர்கள், மென்பொருட்கள் ஆகியவை அழிக்கப்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் இந்த வசதியை பயன் படுத்தி நாம் நமது லேப்டாப்பை ஃபேக்டரி Default Settings இற்கு ரீஸ்டோர் செய்துக் கொள்ளும் பொழுது, புதிதாக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது அதில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்கள், டிரைவர்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதம் திரும்ப பெற முடியும்.

இந்த  Recovery Disc அல்லது Recovery partition இல் உள்ள இயங்குதளம் உரிமம் பெற்றது (Licensed OS) என்பதும் இதற்காக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். 

சரி இப்படி Recovery Disc இல்லாத லேப்டாப்பிற்கு அதன் Recovery partition -இல் இருந்து Recovery டிஸ்க் உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் லேப்டாப் வாங்கி குறுகிய காலத்திற்குள்ளாக, அதாவது இந்த Recovery partition சேதம் எதுவும் ஆவதற்கு முன்பாக உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது. இதை HP லேப்டாப்பில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். 

இதை உருவாக்குவதற்கு நம்மிடம் தயாராக இரண்டு DVD + R டிஸ்க்குகள் இருக்கவேண்டும். (ஒரு சில Recovery disc உருவாக்கும் மென்பொருட்கள் DVD-RW, DVD+RW போன்ற டிஸ்க்குகளை ஏற்றுக் கொள்வது இல்லை). மேலும் லேப்டாப் பாட்டரி அளவை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த உருவாக்கத்தின் நேரம் சுமார் ஒரு மணி நேரம் என்பதால்,  இடையில் மின் வெட்டு ஏதும் இல்லாமலிருத்தல் நலம். 

முதலில் உங்கள் லேப்டாப் ஏற்கனவே இயக்கத்தில் இருந்தால் ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இணைய இணைப்பு மற்றும் Wireless ஐ அனைத்து விடுங்கள். இந்த செயல்பாட்டின் போது மற்ற எந்த அப்ளிகேஷனையும் இயக்க வேண்டாம். 

Start பட்டனை க்ளிக் செய்து All Programs சென்று  PC Help & Tools மற்றும்Recovery Disc Creation  ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள். அல்லது ஸ்டார்ட் மெனுவில் சர்ச் பாக்ஸில் Recovery Disc Creation என டைப் செய்து HP Recovery Manager ஐ திறந்து கொள்ளுங்கள். 

Welcome திரையில் Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். Insert Blank Recordable disc திரை வரும் வரை Next பட்டனை க்ளிக் செய்து வாருங்கள். 
இப்பொழுது Blank DVD+R டிஸ்க்கை நுழையுங்கள். இச்சமயத்தில் ஏதேனும் AutoPlay திரை வந்தால் அதனை மூடி விடுங்கள். 

   
Next பட்டனை அழுத்தி பொறுமையாக காத்திருங்கள். 

முதல் DVD உருவான பிறகு தானாகவே eject ஆகிவிடும். இதை எடுத்து முதலில் "Recovery Disc 1 of 2" என எழுதி வைத்துக் கொண்டு, அடுத்த DVD ஐ நுழைத்து Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். 

                   
இந்த பணி முடிந்த பிறகு, இரண்டாவது DVD க்கும் அதே போல பெயர் எழுதி வைத்துக் கொண்டு, Finish பட்டனை க்ளிக் செய்து மூடி விடுங்கள். 

பெரும்பாலான லேப்டாப்களில் இந்த Recovery டிஸ்க் உருவாக்குவது ஒரே ஒருமுறை மட்டும்தான் அனுமதிக்கப் படுகிறது என்பதனால், இந்த செயல்பாட்டின் பொழுது மிகவும் கவனமாக இருப்பதுடன், நல்ல தரமான DVD களை பயன்படுத்துவதும், அவற்றை பத்திரமாக வைத்திருப்பதும் அவசியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.


அவ்வளவுதான். இனி உங்கள் லேப்டாப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, ரீஸ்டோர் செய்ய வேண்டுமெனில் இந்த DVD களின் மூலம் பூட் செய்து சரி செய்ய முடியும். 

பதிவு திருடர்களுக்கு ஓர் அறிவிப்பு:-
எனது கட்டுரைகள் அனைத்தும் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தொடர்ந்து பிரசுரிக்கப் பட்டு வருவதால், நீங்கள் பதிவுகளை திருடும் பொழுது, அந்த பத்திரிக்கையின் காப்புரிமையை மீறுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Gmail Tricks: மின்னஞ்சல்களை கோப்புகளாக சேமித்து வைக்க

வழக்கமாக நமக்கு Gmail லில் வருகின்ற முக்கியமான மின்னஞ்சல்களை, ஆவணப் படுத்துவதற்காக வேர்டு கோப்புகளாக மாற்ற, மின்னஞ்சலில் உள்ள விவரங்களை தேர்வு செய்து, காப்பி செய்து பின்னர் வெற்று வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து சேமித்துக் கொள்வோம். 

இந்த பணியை மேலும் எளிதாக்க வந்துள்ளது Gmail Labs இன் Create a Document வசதி! இதனை நமது Gmail இல் இணைத்து எப்படி பயன் படுத்துவது என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்கள் Gmail கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்து, Settings பக்கத்திற்கு செல்லுங்கள்.


இங்குள்ள வசதிகளில் Labs லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இங்கு Available Labs பட்டியலில் உள்ள ஒவ்வொரு வசதியாக பார்த்து, Create a Document பகுதிக்கு சென்று அதிலுள்ள Enable பொத்தானை அழுத்துங்கள்.


பிறகு அந்த பக்கத்தின் இறுதிக்கு சென்று அங்குள்ள Save changes பொத்தானை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி தேவையான மின்னஞ்சலை திறக்கும் பொழுது, வலது புறத்தில் புதிய மெனு தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.




இதில் Create a Document லிங்கை க்ளிக் செய்தால், அடுத்த டேபில் Google Docs திறக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒரு Google டாக்குமெண்டாக உருவாக்கப்படும்.


அடுத்து மேலே உள்ள File menu விற்கு சென்று, Download as க்ளிக் செய்து,

 


ODT, PDF, RTF, Text, Word, Html என தேவையான கோப்பு வகையை க்ளிக் செய்து தரவிறக்கி வைத்துக் கொள்ளலாம்.


Windows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்

கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் அட்மின் கடவு சொல்லை மறந்து போவது, அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.  



இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள்  அனைத்தும் இழந்துவிடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது. 

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 

விண்டோஸ் 7  Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணினியை துவக்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள். 


 
அடுத்து வரும் Options  திரையில், Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில், கீழே உள்ள கட்டளையை கொடுங்கள். 

copy c:\windows\system32\sethc.exe c:\

இப்பொழுது Sticky Keys கோப்பானது C:\ இல் காப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள். 

copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe   

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும்பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.       

 
 
   
 






இப்பொழுது கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள்.  Login திரை தோன்றும் பொழுது, Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)




Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர் பெயர் (surya) மற்றும் கடவு சொல்லை (newpassword) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)


net user surya newpassword














அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7  DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.

 c:\sethc.exe  c:\windows\system32\sethc.exe.


 Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள்.

Facebook: வேண்டாதவர்களை Block செய்ய

Facebook சமூக இணைத்தில் பல நண்பர்களை நாம் இணைத்திருப்போம். சில சமயங்களில், நம்க்கு வேண்டாத, நாம் விரும்பாத ஒரு சிலரை நமது Facebook கணக்கிலிருந்து நீக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் Facebook  தளத்தில் உங்கள் பயனர் கணக்கில் நுழையுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Accounts லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Privacy Settings பகுதிக்கு செல்லுங்கள்.


அடுத்து திறக்கும் privacy settings பக்கத்தில் கீழே உள்ள, சிவப்பு நிற ஐகானை கொண்டுள்ள, Block Lists பகுதியில் Edit your lists லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில், நாம் இரண்டு வழிகளில் ஒருவரை Block செய்திட முடியும். முதலாவது, அந்த நபரின் பெயரை Block Users பகுதியில் உள்ள Name என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் தட்டச்சு செய்து, Block this User பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவும், 

(ஒரே பெயரில் பலர் இருக்கும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட பெயரைக் கொண்ட அனைவரது விவரங்களும் பட்டியலிடப்படும், அவற்றில் நமக்கு வேண்டாதவரை தேர்வு செய்து கொள்ளலாம்.)


இரண்டாவது, அந்த நபரின் மின்னஞ்சல் முகவரியை Email என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் கொடுத்து Block this User பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவும் Block செய்திடலாம். 

Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய

Facebook சமூக இணையத்தில் வழமையாக குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நண்பருடன் மட்டமே சாட் செய்யும் வசதி உள்ளதாக மட்டுமே நம்மில் பலரும்  அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஒரே சமயத்தில் ஆன்லைனில் உள்ள நாம் விரும்பும் பல நண்பர்களை ஒரு குழுவாக சேர்த்து சாட் செய்ய முடியும் என்பது நம்மில் சிலருக்கு தெரியாது. .
Facebook கணக்கில் நுழைந்து கொண்டு, ஆன்லைனில் இருக்கும் விரும்பிய நண்பர் ஒருவரை சாட்டில் க்ளிக் செய்யுங்கள். 






இப்பொழுது திறக்கும் சாட் பெட்டியில் வலது மேற்புறமுள்ள கியரை க்ளிக் செய்து Add Friends to Chat.. என்பதை க்ளிக் செய்யுங்கள். 





கீழே தோன்றும் பெட்டியில் நீங்கள் சாட் குழுவில் இணைக்க விரும்பும் நண்பர்கள் பெயரை ஒவ்வொன்றாக டைப் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 




அவ்வளவுதான் இனி இப்பொழுது உருவாக்கிய குழுவில் உள்ள நண்பர்களிடம் ஒரே சமயத்தில் சாட் செய்திட முடியும். 

விண்டோஸ்:- மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நுழைய

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயங்குதளங்களில் விண்டோஸ் XP யில் உள்ளது போல Administrator கணக்கு இல்லையே என்று பலரும் யோசித்திருக்கக் கூடும். இந்த இயங்குதளங்களிலும் Administrator கணக்கு வழக்கம் போல உண்டு. ஆனால் மறைக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை உங்கள் கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, இந்த Administrator கணக்கில் நுழைந்து சரி செய்து விடலாம் என்று சிந்திக்கும் பொழுது, இந்த கணக்கை எப்படி enable செய்வது என்று பார்க்கலாம். 

வழக்கம் போல உங்கள் விண்டோஸ் பயனர் கணக்கில் நுழைந்துக் கொள்ளுங்கள். search box இல் CMD என டைப் செய்து மேலே தோன்றும் Command Prompt லிங்கில் வலது க்ளிக் செய்து Run as Administrator க்ளிக் செய்து Command prompt சென்று விடுங்கள். 


இங்கு net user administrator /active:yes என டைப் செய்து என்டர் கொடுக்கவும். 

டைப் செய்யும் பொழுது சரியான space ஆகியவற்றை கவனித்து மேலே தரப்பட்டுள்ளது போல உள்ளீடு செய்யவும். The command completed successfully என்ற செய்தி வருவதை கவனிக்கவும். இப்பொழுது ஒருமுறை Logout செய்து பின்னர் வரும்பொழுது இந்த Administrator கணக்கும் திரையில் தோன்றுவதை கவனிக்கலாம். பெரும்பாலும் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் ஏதும் இருப்பதில்லை.
இந்த வசதியை இப்படியே தொடர்வதாக இருந்தால் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் இட்டு வைப்பது நல்லது. அல்லது உங்கள் வேலை முடிந்த பிறகு, இந்த கணக்கை மறுபடி பழையபடி மறைத்து வைக்க மேலே சொன்ன வழிமுறையின்படி சென்று net user administrator /active:no எனும் கட்டளையை கொடுத்துவிடலாம். 

இதே net user கட்டளையை பயன்படுத்தி விண்டோஸ் XP யில் மற்றொரு admin rights உள்ள பயனர் கணக்கில் நுழைந்து, DOS prompt  சென்று net user administrator * என்ற கட்டளையை உள்ளீடு செய்வதன் மூலமாக Administrator கணக்கின் கடவுசொல்லை மாற்றிவிடலாம். (பழைய கடவுச்சொல் நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை) 
.     

Windows Vista / 7 ல் - 50 பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே இலவச கருவி!

விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் ஏழு இயங்குதளங்களை பயன்படுத்திவரும் பயனாளர்கள். ஒரு சில சமயங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் பலவகையானவை. உதாரணமாக CD/DVD drive கள்  My Computer -இல் காணாமல் போய்விடுவது, டெஸ்க்டாப்பிலிருந்து  Recycle bin ஐ காணாமல் போவது.  Task Manager மற்றும் Registry Editor திறக்காமல் போவது. Explorer.exe திறக்காமல் போவது. Thumbnail வேலை செய்யாமல் போவது. Internet Options காணாமல் போவது. Font install செய்யமுடியாமல் போவது. Aero peek வேலை செய்யாமல் போவது. 

இது போன்ற 50 பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே ஒரு சிறிய இலவச மென்பொருள் கருவி  FixWin உங்களுக்காக..,(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு முதல் திரையில் தோன்றும் வசதிகளில் System File Checker Utility  ஐ முதலில் ரன் செய்யுங்கள். 
அடுத்ததாக create a System Restore Point   ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. நாம் மேற்கொள்ளப் போகும் செயலில் ஏதேனும் தவறு நேர்ந்தால், இந்த System Restore Point ஐக் கொண்டு பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டுவர இயலும். 

அடுத்து ஒவ்வொரு வசதியாக தேர்வு செய்து Fix பொத்தானை க்ளிக் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் Fix செய்தபிறகு கண்டிப்பாக உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்ய மறவாதீர்கள். 

உபயோகமான Desktop Icons - ON/OFF

ஒரு சிலரது கணினின் டெஸ்க்டாப்பில் கோப்புகள், ஷார்ட்கட்கள், ஃபோல்டர்கள் என நிரம்பி வழிவதை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கே என்ன என்ன ஐகான்கள் தங்கள் டெஸ்க்டாப்பில் உள்ளன என்பது நினைவில் வைத்திருப்பது கடினம்தான். 


இவ்வாறு தங்கள் டெஸ்க்டாப்பை வைத்திருப்பவர்கள், தங்களுக்கு விருப்பமான, அழகான ஒரு வால் பேப்பரை திரையில் அமைக்கும் பொழுது, இந்த ஐகான்களை OFF செய்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தால், வழக்கமாக நாம் செய்வது, டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்து, Arrange Icons by --> Show Desktop Icons க்ளிக் செய்வதன் மூலமாக, ON/OFF செய்ய முடியும்.


ஆனால், இந்த பணியை எளிதாக்க, Hide Desktop Icons எனும் மிகச் சிறிய இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு இதற்கு ஒரு ஷார்ட்கட் ஐ உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்து விடாதீர்கள்.(ஏனென்றால் டெஸ்க்டாப் ஐகான்களை OFF செய்த பிறகு, மறுபடியும் ON செய்வதில் சிரமம் ஏற்படலாம்) மாறாக Start Menu / Quick Launch பாரில் இணைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு முறை க்ளிக் செய்ய, Desktop Icon கள் OFF ஆகும், மறுமுறை க்ளிக் செய்ய ON ஆகும். 






விண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா?

விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது நாம் புதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன. 

முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறிய முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம்.  Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். 
இப்பொழுது திறக்கும் System information திரையில் System Type -ல் உங்களது இயங்குதளம் 32/64 பிட்டா என்பதை அறிய முடியும். 


சரி! இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலே உள்ள படத்தை கவனியுங்கள், அதில் Installed Memory (RAM)   8 GB. விண்டோஸ் 32 பிட் இயங்குதளங்கள் 4 GB க்கு மேல் நினைவகத்தை ஏற்றுக் கொள்ளாது.


இது கணினியின் நினைவகம் மட்டுமல்ல, நீங்கள் உபயோகிக்கும் வீடியோ கார்டும்தான். 4 GB க்கு மேலாக RAM அல்லது வீடியோ கார்டு பயன் படுத்த வேண்டுமானால் நீங்கள் 64 பிட் இயங்குதளத்திற்குத்தான் மாற வேண்டும். 

மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும். 

மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது. 

உங்கள் கணினியின் தோழன் - கிளாரி யுடிலிடீஸ்

சில சமயங்களில் நமது கணினி வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகம் குறைந்து இயங்குகிறதா? வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா? இணைய வேகம் குறைந்துள்ளதா? உங்கள் கணினியை optimize செய்து, பாதுகாக்க..   இதோ உங்களுக்கான தோழன் - Glary Utilities. தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவச மென்பொருள் கருவி. (பெயரில் பெண்பால் உள்ளதால் தோழியாகவும் பாவிக்கலாம்)

இது போன்ற பணிக்காக CCleaner எனும் கருவியை பலரும் பயன்படுத்தி வந்தாலும், இது  கிளாரி யுடிலிடீஸ் கருவியில் அதைவிட பல வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்த கருவியை பயன்படுத்தி, நம் வன்தட்டில் உள்ள தேவையில்லாத கோப்புகள், கோப்புறைகளை நீக்குவது (தேவையான கோப்பு எது, தேவையில்லாத கோப்பு எதுவென்று அது முடிவு செய்து கொள்ளும்), விண்டோஸ் Registry  யை கிளீன் செய்வது, உடைந்த ஷார்ட் கட்டுகளை  நீக்குவது, Uninstall Manager போன்ற பயனுள்ள வசதிகளும், 
 
 
Startup ஃபோல்டரில் உள்ள தேவையற்ற குப்பைகளை களைவது, நினைவகத்தை சிறந்த பயன்பாட்டிற்கு தயார் செய்தல், Context menu Manager ஆகிய வசதிகளும் .

கோப்புகளின் பாதுகாப்பு, இணைய வேகத்தை அதிகரிக்க என பல வகையான வசதிகளுடன் இருப்பது இதனுடைய சிறப்பம்சம். 


ஒருவேளை இதனை இயக்கிய பிறகு உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மறுபடியும் Restore செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதிலுள்ள Context menu வசதி குறிப்பிட்ட கோப்புறைக்குள் உள்ள கோப்புகளை கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.