சனி, 31 ஆகஸ்ட், 2013

எப்படி ஃபேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்குவது?

ஃபேஸ்புக் பற்றி அறியாத இணைய பயன்பாட்டாளர்கள் அதிகமாக இருக்க மாட்டார்கள்.
புகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் தகவல்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள கொள்ள பயன்படுகிறது.
தற்போது ஃபேஸ்புக் தளம் தனது போட்டியாளரான கூகுளினை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி விட்டது. தற்போது உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட தளமாக உருவெடுத்துள்ளது.
இந்த தளத்தில் பகிரப்படும் பகிர்வுகள் பல தவறானவைகளாகவே உள்ளது. மேலும் ஆபாசமான செய்திகளும் அதிகம் பகிரப்படுகிறன. அதற்கும் மேலாக நம்முடைய சுயதகவல்கள் திருடப்படுகிறன என்பது மிகவும் வருத்தம் அளிக்ககூடிய ஒன்றாக உள்ளது.
இதனால் பலர் தங்களுடைய ஃபேஸ்புக் கணக்கினை நீக்க முடிவு செய்துள்ளனர். ஃபேஸ்புக் கணக்கில் இருந்து விருப்பதேர்வினை பயன்படுத்தி நீக்க முயன்றால் நம்முடைய தகவல்கள் மறைக்கபடுமே தவிர, நம்முடைய கணக்கு முழுமையாக நீக்கப்படமாட்டாது.
 
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று ஃபேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும் அதில் Delete my account என்னும் பொத்தானை அழுத்தவும்.
 
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் கொடுக்கப்பட்டுள்ள அடையாள சொற்களை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது.
ஆனால் நீங்கள் ஃபேஸ்புக் கணக்கினை நீக்கும் முன் அதில் உள்ள தகவல்களை நகல் எடுத்து வைத்து கொள்ளவும். நீங்கள் செய்த நாளிலிருந்து 14 நாட்கள் வரை குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழையக்கூடாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே ஃபேஸ்புக் கணக்கு நீக்கம் செய்யப்படும்.
- See more at: http://www.viyapu.com/news_detail.php?cid=12141#sthash.f8Z3ePaE.dpuf

ஆங்கில மொழியைத் தெளிவாகக் கற்க உதவும் இணையதளம்


ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. 

வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது.

இந்த தளம் உள்ள இணைய முகவரி முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. 

எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. 

ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். 

Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா? ஆங்கிலம் தடுமாறுகிறதா? நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. 

நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறித்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. 

இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும்.


Read more: http://therinjikko.blogspot.com/2013/03/blog-post_30.html#ixzz2dbHdkxls

computer technology


வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கணினி பயன்படுத்தும் அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு

கணினியில் இப்போது தான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் அதற்குள்
என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்
கணினியின் புரோகிரமருக்கும் சில நேரங்களின் மண்டை குடைச்சலை
கொடுக்கும் புரோகிராம் பிழை (Error) -க்கும் எளிதான வகையில் தீர்வு
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


                                           

கணினியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும்
கூகுளில் சென்று தேடினேன் பல முடிவகள் கொடுத்தாலும் என்னால்
எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்,
புரோகிராம்-ல் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை
செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று
சொல்வபவர்களுகும் இதற்கு தீர்வு தேடி பல தளங்கள் செல்லவேண்டாம்
ஒரே தளம் அனைத்து கணினி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது

இணையதள முகவரி : http://www.errorhelp.com

பிழை உதவி ( Error Help) இதைதான் மையமாக வைத்து இந்தத்தளம்
செயல்படுகிறது. மற்றதளங்களைப்போல அல்லாமல் பிரச்சினையை
நாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக்
கொடுக்கின்றனர். இதை ஏற்கனவே எத்தனை பேர் பயன்படுத்தி
உள்ளனர். எந்ததளத்தில் நம் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது
அதன் இணையதள முகவரி என்ன என்று தெளிவாக நமக்கு
காட்டுகிறது, நீங்கள் கேட்கும் பிரச்சினை இதுவரை வரவில்லை
என்றால் 48 மணி நேரத்திற்க்குள் சரியான பதிலை கொடுக்க
முயற்சி செய்கிறோம் 
என்றும் கூகுளில் நம் பிரச்சினையைத்
தேடி அதற்கான தீர்வையும் இவர்களின் இணையப்பக்கதிலே
காட்டுகின்றனர். கண்டிப்பாக இந்தத் தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.


Read more: http://www.anbuthil.com/2013/06/help-for-your-computer-error.html#ixzz2dPAJwXaN

விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ்

Windows System Tools


நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.

இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.

1. விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): இதனை இயக்கினால், அது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனையிட்டு, அதில் பிழைகள் இருந்தால், எடுத்துக் காட்டும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள மெமரி குறித்துச் சோதனையிட, வேறு ஒரு புரோகிராம் தேவையில்லை. விண்டோஸ் தரும் இந்த டூலையே பயன்படுத்தலாம்.

2. ரிசோர்ஸ் மானிட்டர் (Resource Monitor): கம்ப்யூட்டரின் பல்வேறு பகுதிகளின் செயல் திறனை அறிந்து கொள்ள இந்த டூலைப் பயன்படுத்தலாம். சிபியு, டிஸ்க், நெட்வொர்க் மற்றும் மெமரி கிராபிக்ஸ் என அனைத்து பிரிவுகளின் திறனை அளக்கிறது. ஒவ்வொரு திறனுக்குமான செயல்பாட்டு புள்ளி விபரங்களை எடுத்துத் தருகிறது. எனவே, இதன் மூலம், எந்த புரோகிராம், நம் கம்ப்யூட்டரின் டிஸ்க்கினை அல்லது நெட்வொர்க்கினை மிகவும் அதிகமாகப் பயன்படுத்துகிறது என அறியலாம். எந்த செயல்பாடு, இன்டர்நெட் இணைப்புடன், அல்லது வேறு இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது என்பதனை அறியலாம். டாஸ்க் மானேஜர் புரோகிராம் தன் செயல்பாட்டில் அதிகமான தகவல்களைத் தருவதனைக் காட்டிலும், இந்த புரோகிராம் தருகிறது. டாஸ்க் மானேஜர் புரோகிராமினை இயக்கி, அதில் உள்ள Performance டேப்பினை கிளிக் செய்து, பின்னர் இதில் கிடைக்கும் Resource Monitor ஐ இயக்க வேண்டும். ஸ்டார்ட் மெனுவில் அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீனில், தேடல் கட்டத்தில் Resource Monitor என்று டைப் செய்தும் இதனைப் பெறலாம்.

3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): பெர்பார்மன்ஸ் மானிட்டர் டூல், பல்வேறு செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் தேடித் தரும். குறிப்பிட்ட கால நேரத்தில் கம்ப்யூட்டர் புரோகிராம்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாட்டினை இதன் மூலம் அறியலாம். மேலே சொல்லப்பட்ட பெர்பார்மன்ஸ் மானிட்டர் என்பது, மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல் டூல்ஸ் (Microsoft Management Console (MMC) என்ற தொகுப்பின் ஒரு பகுதி தான். பெரும்பாலான இது போன்ற டூல்ஸ்களை, Administrative Tools போல்டரில் பெறலாம். அல்லது, Computer Management என்ற அப்ளிகேஷனைத் திறந்தும் பெறலாம். இவை போன்ற டூல்ஸ்களுடன், கீழ்க்கண்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன.

1. Task Scheduler: காலத்தில் செய்யப்பட வேண்டியவை என்று அடையாளம் தரப்பட்ட பணிகளைக் காண்பதற்கும், அவற்றை செட் செய்வதற்கும் இந்த டூல் பயன்படுகிறது. நாம் வரையறை செய்திடும் பணிகளோடும், சிஸ்டம் செட் செய்து அமைத்திடும் பணிகளையும் காலத்தே செயல்படுத்தும்.

2. Event Viewer: சிஸ்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் காட்டும். சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும் நிகழ்வுகளிலிருந்து, அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிராஷ் ஆவதிலிருந்து, புளு ஸ்கிரீன் ஆப் டெத் நிகழ்வு வரை அனைத்தையும் பட்டியலிட்டு தரும்.

3. Shared Folders: உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், பங்கிடப்பட்ட போல்டர்களைக் காட்டும் ஒரு இன்டர்பேஸ். எந்த எந்த போல்டர்கள், உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் பங்கிடப்படுகின்றன என்பதனைக் காட்டும் ஒரு டூல்.

4. Device Manager: உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை நாம் தெரிந்து கொள்ளப் பயன்படும் டூல். இதன் மூலம் அவற்றைச் செயலிழக்கவும் செய்திடலாம். புரோகிராம்களின் ட்ரைவர்களை செயல்படும்படி அமைக்கலாம்.

5. Disk Management: டிஸ்க்கினைப் பிரித்துக் கையாளும் பார்ட்டிஷன் மேனேஜர் டூல். டிஸ்க் இடத்தைப் பிரிக்க, வேறு ஒரு தர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை இல்லை. இதனையே பயன்படுத்தலாம்.

5.A. Services: விண்டோஸ் இயக்கத்தில், பின்புலத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளைக் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நமக்கு உதவிடும் டூல். Administrative Tools போல்டரில், மற்ற பயன்பாட்டு புரோகிராம்களும் கிடைக்கின்றன. விண்டோஸ் பயர்வால் போன்ற பாதுகாப்பு தரும் புரோகிராம்கள் உட்பட பல புரோகிராம்கள் உள்ளன.

4. User Accounts: விண்டோஸ் சிஸ்டத்தில், வழக்கமான இன்டர்பேஸ் மூலம் கிடைக்காத, யூசர் அக்கவுண்ட்ஸ் குறித்த விபரங்களை, இந்த மறைத்து வைக்கப்பட்டுள்ள User Accounts டூல் தருகிறது. இதனைத் திறக்க, WinKey+R கீகளை அழுத்தி ரன் டயலாக் கட்டம் பெறவும். netplwiz அல்லது control user passwords2 என டைப் செய்து, என்டர் தட்டவும். இந்த டூல் கிடைக்கும் விண்டோவிலேயே, Local Users and Groups டூலை இயக்கத்திற்குக் கொண்டு வர ஷார்ட் கட் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்டோஸ் நிர்வகித்திட பல டூல்கள் கிடைக்கும்.

5. Disk Cleanup: மற்ற டூல்களைப் போல, இது மறைத்து வைக்கப்பட்ட டூல் அல்ல. ஆனால், விண்டோஸ் பயன்படுத்துவோர் பலரும் இதனை அறிந்திருப்பது இல்லை. உங்கள் கம்ப்யூட்டரில் அழிக்கப்பட வேண்டிய பைல்களை இது கண்டறியும். தற்காலிக பைல்கள், பழைய சிஸ்டம் ரெஸ்டோர் நிலைகள், விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்கள் மேம்படுத்தப்படுகையில், விடப்பட்ட தேவையற்ற பைல்களை இது கண்டறிந்து காட்டும். PC Cleaning Utility புரோகிராம் செய்திடும் அனைத்து பணிகளையும் இது செய்திடும். இது இலவசமாக விண்டோஸ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. டிஸ்க்கினை கிளீன் செய்யத் தொடங்கி, நம்மிடம் பணம் பறிக்கும் வேலையினை இது மேற்கொள்ளாது. நம்மில் பலரும் சிகிளீனர் புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். அதே வேலையினை விண்டோஸ் சிஸ்டத்தில் இலவசமாக இணைந்தே வழங்கப் படும் டிஸ்க் கிளீன் அப் புரோகிராம் செய்கிறது. ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் Disk Cleanup என டைப் செய்து இதனைப் பெறலாம்.

6. ரிஜிஸ்ட்ரி எடிட்டர்: நம்மில் பலரும் அறிந்த ஒரு டூல். மைக்ரோசாப்ட் இதனை மறைத்தே வைத்துள்ளது. regedit என டைப் செய்து இதனைப் பெறலாம். இதனைக் கையாள்வதில் கவனம் தேவை. எதற்கும், இதனைத் திறக்கும் முன், இதன் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

7. எம்.எஸ். கான்பிக்: மிக அருமையான ஒரு புரோகிராம் டூல். விண்டோஸ் இயக்கத்தின் போது, என்ன என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், எந்த எந்த புரோகிராம்களை இயக்க வேண்டும், இயங்கி வரும் எந்த புரோகிராம்களை நீக்க வேண்டும் என நாம் முடிவு செய்வதனை இதன் மூலம் நிறைவேற்றலாம். ஸ்டார்ட் மெனுவில் msconfig என டைப் செய்து இதனைப் பெறலாம்.

8. System Information: இதனை இயக்கும் கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். கம்ப்யூட்டர் மாடல் எண் என்ன என்பதிலிருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள டிவிடி ராம் சாதனம் எந்த மாடலைச் சேர்ந்தது என்பது வரை அறிந்து கொள்ளலாம். இப்படியே அனைத்து இயக்கங்கள் குறித்தும் தகவல்களை இதன் மூலம் பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட பல பயன்பாட்டு டூல் சாதனங்கள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம், நாம் எப்போதாவது, நம் தேவைகளுக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?

 கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்
Excel இல் எண் வடிவத்தில் உள்ள தொகையை எழுத்தால் எழுதுவது எப்படி?
 
   அரசு அலுவலகங்களில் கணினி தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட  எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள். பல்வேறு விவரங்களின் தொகுப்புகள், கணக்கீடுகள்,அறிக்கைகள் தயாரிப்பதற்கு எக்செல் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலதிகாரியிடம் நம்மை கொஞ்சம் அறிவாளியாகக் காட்டிக் கொள்ள எக்செல் பயன்படும். எனக்குத் தெரிந்து எக்செல்லில்  உள்ள அனைத்து பயன்பாடுகளையும் அறிந்து பயன்படுத்தியவர்  மிகக் குறைவாகவே இருப்பார்கள். எத்தகைய கணக்கீட்டையும் செய்ய வல்லது எக்செல் என்று கூறுவர். அதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.
   தேவை இருக்கும்போதுதானே  தேடுதல் தொடங்குகிறது? நிறைய தடவை எக்செல்லில் பல்வேறு அட்டவணைகள் தயாரிக்கும்போது எண்களை எழுத்துகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஒவ்வொரு  முறையும் எழுத்தால் எழுதுவது போல டைப் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஏதேனும் எக்செல்லில் பங்க்ஷன் இருக்கிறதா என்று தேடித் பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை..யாரிடமும் தக்க பதிலும் கிடைக்க வில்லை. இணையத்தில் தேடியபோது எக்செல்லில் இதற்கான நேரடியான வழி இல்லை என்று தெரிய வந்தது. 

   மைக்ரோசாப்ட் ஆபீஸின் எக்சல் என்னும் பிரம்மாண்டத்தில் எண்களை ஆங்கிலத்தில்கூட  எழுத்துக்களாக மாற்றும்  வசதி இல்லை என்ற போது ஆச்சர்யமாகத்தான்  இருந்தது. ஆனால் அமெரிக்க கரன்சியை எழுத்துக்களாக மாற்றும் நிரலை மைக்ரோசாப்ட் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை எக்செல்லில் இணைத்துக் கொண்டால் எண்பெயர்களை எளிதில் மாற்ற முடியும். விசுவல் பேசிக் ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் மாற்று வழி தேடினேன்.
   நமது தேவை இந்திய ரூபாயை எழுத்துக்களாக மற்றும் வசதிதானே இன்னும் தேடிய போது இதற்கான சில  add inகள் கிடைத்தது.
அவற்றில்  ஒன்று

    கஸ்டம்ஸில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் எண் வடிவில் இருக்கும் ரூபாயை எழுத்தாக மாற்றக் கூடிய இந்த ADDIN ஐ உருவாக்கி இருக்கிறார். (அவர் மென்பொருளாளர் அல்ல என்றபோதும் கணினி பற்றி பல விஷயங்களை  DIGITAL QUEST என்ற வலைப் பக்கத்தில்  எழுதியுள்ளார்).

 இதை நிறுவ முதலில் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து   கோப்பை பதிவிறக்கம்  செய்யவும்.

SureshAddin.xla பதிவிறக்கம் 

DIGITAL QUEST என்ற வலைப பக்கத்துக்கும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.dq.winsila.com/

 1.பின்னர் ஒரு EXCEL 2007 ஐ  திறந்து கொள்ளவும். இடது மூலையில் உள்ள OFFICE BUTTON ஐ கிளிக் செய்யவும் அதில் Excel Options க்கு செல்லவும் 

 2.Excel Option விண்டோவில் add ins மற்றும் Go கிளிக் செய்க

 3. அடுத்த விண்டோவில் Browse ஐ கிளிக் செய்த ஏற்கனவே ல்வுன்லோது செய்த ஃபைல் இருக்கும் இடத்திற்கு சென்று கீழுள்ள படத்தில் உள்ளவாறு SureshAddin.xla கோப்பை தேர்வு செய்து ஒ.கே ஒ.கே கொடுக்கவும் 

 இப்பொழுது எண்களில் உள்ள ரூபாய் மதிப்பை எழுத்து வடிவில் மாற்றும் வசதி நிறுவப்பட்டு விடும்.
add in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும் 

  ஒரு எக்செல் ஃபைலை திறந்து ஏதாவது ஒரு செல்லில் ஏதாவது ஒரு எண்ணை டைப் செய்யவும் எடுத்துக்காட்டாக  A1 செல்லில் 15452.60 என்று உள்ளீடு செய்வதாகக் கொள்வோம்
அதற்கு கீழே உள்ள செல்லில் அதாவது A2 வில் கீழ்க்கண்டFORUMULA ஐ டைப் செய்தால்
=rswords(A1) 
இப்போது  Rupees Fifteen Thousand Four Hundred Fifty Two And Paise Sixty Only 
என்று மாறுவதை காணலாம் 



A2 செல்லில் உள்ளீடு செய்த Formula சிவப்பு வட்டமிட்ட FORUMULA BAR லும்  தெரிவதை பார்க்கலாம்.
A1 என்ற செல் Referense க்கு பதிலாக எண்ணையும் நேரடியாக குறிப்பிடலாம்
உதாரணத்திற்கு =rswords(98765.50) என்று டைப் செய்தால் 
Rupees Ninety Eight Thousand Seven Hundred Sixty five and Paise Fifty Only என்று வந்து விடும்.
இதன்  மூலம் 100 கோடி வரை எழுத்துருவிற்கு மாற்ற முடியும் 
வேறுசில Add in களும் உண்டு .

 பயனுள்ளதாக இருந்ததா? உங்களில் ஒரு சிலருக்கேனும் உதவக் கூடும்  என்று நம்புகிறேன்.

mobileல் எடுக்கும் வீடியோவை internetல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்

கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம் வழங்குகிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.

மேலும் கணினி Web Camera-விலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadjet-ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.


தேவை:
           1.உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.

           2.உங்கள் செல்பேசி Android,Apple,bada,meamo 5,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
         
           3.இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.தளத்திற்க்கு செல்ல சுட்டி
           
           4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்

எல்லா விதமான டெஸ்க்டாப் கணினிகளுக்கும் டிரைவர் எளிதில் இன்டால் செய்யலாம்.



 விண்டோஸ் கிராஸ் ஆகிவிட்டால் புதியதாக ஆப்ரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்படும் போது டிரைவர்களை அனைத்தும் புதியதாக செய்யப்பட வேண்டும். பெரும்பாலான கணிணி வைத்திருப்பவர்கள் அனைவரும் டிரைவர்களை வைத்திருப்பதில்லை.. டிரைவர் CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த டிரைவரை தேடுவோருக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதள்ளதாக அமையும். டிரைவர்களை எளிதில் கையாள இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மென்பொருள் பெயர் EASY DRIVER PACKS 
இந்த மென்பொருள் Google இணையத்தில் தேடினாலே கிடைக்கிறது.
மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற குறிப்பிற்கு கீழே உள்ள படங்களை பார்த்து முயற்சி செய்யவும்
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போது உங்களது கணிணியில் டிரைவர்கள் இண்டால் செய்ய எல்லா விதமான பாக்ஸ்களையும் டிக் செய்து கொள்ளவும்
 இரண்டாவதாக எக்ஸ்டிராக் அண்டு இண்ஸ்டால் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்
அவ்வளவுதான் கணிணியில் எல்லா டிரைவர்களும் இண்ஸ்டால் செய்யப்பட்டுவிடும்.

இணைய இணைப்பு அறுந்து போனால்?


இணைய இணைப்பு என்பது தற்போது கம்ப்யூட்டர் இயங்கும் நேரம் முழுமைக்கும் தேவையான ஓர் சாதனமாகக் கருதப்படுகிறது. 

கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

ஆனால், இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை ஆகிறது. குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. 

தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்; மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம். 

நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங் களையும் செய்து பார்க்கலாமே!

1. வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள். ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை ஆன் செய்திடுங்கள். 

இவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துவோரே அதிகம். அவர்கள் அதனை மட்டும் ரீபூட் செய்தால் போதும். 

2. உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள். 

3. மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று பொருள். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். 

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள். அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் குறையினைத் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 

4. புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறந்து கொள்ளுங்கள். பின் www.dinamalar.com என்று தள முகவரி கொடுத்துப் பாருங்கள். தினமலர் வெப்சைட் கிடைத்தால், நல்லது. இல்லை என்றால் தொடர்ந்து அடுத்து தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளுங்கள்.

5. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில், ரன் பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் மானிட்டர் திரையில், கறுப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும். அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig /all என டைப் செய்திடுங்கள். உங்களுடைய default gateway மற்றும் DNS servers அறிந்து கொள்ளுங்கள். பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள். பதில் கிடைக்கிறதா? 

6. இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சினை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும். traceroute என்பது ஒரு கட்டளைச் சொல். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கெங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும் ஒரு கட்டளை. traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியைத் தர வேண்டும். 

பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்துவிட்டுப் பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். முதலில் உங்கள் யூசர் நேம் கொடுக்கவும். அவர்கள் உங்கள் அக்கவுண்ட்டினைச் சார்ந்த மேலும் சில தகவல்களை உறுதி செய்வார்கள். 

அவர்கள் கூறும் செயல்பாடுகளையும் பொறுமையாக மேற்கொண்டு, பதில் கொடுங்கள். நிறுவனத்தின் சர்வரில் பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனே அதனை உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் குறை எந்த எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எத்தனை மணி நேரத்திற்குள் அது சரி செய்யப்படும் எனவும் கூறுவார்கள். 

பொறுமையாகக் காத்திருக்கவும். தொடர்ந்து சரி ஆகவில்லை என்றால், மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தினைத் தொடர்பு கொண்டு நினைவு படுத்தவும். நிச்சயம் இணைப்பு சரி செய்யப்படும்.


Read more: http://therinjikko.blogspot.com/2013/08/blog-post_9.html#ixzz2dP6DyEkz

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

Laptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது.

நாம் புதிதாக லேப்டாப் வாங்கும் பொழுது, அதனுடன் அதற்கான Recovery DVD களை தருவார்கள். ஆனால் ஒரு சில லேப்டாப்களுக்கு இந்த DVD களை வாங்கும் பொழுது தருவதில்லை. கேட்டால் 'Recovery partition உள்ளேயே இருக்கு' என்று கூறிவிடுகிறார்கள். மற்றும் சிலர் புதிய லேப்டாப் வாங்கும் பொழுது, இது பற்றி யோசிப்பதில்லை என்பது வேறு விஷயம்.   


இப்படி Recovery Disc தரப்படவில்லை எனில்  பெரும்பாலும் உங்கள் லேப்டாப்பின் வன்தட்டில் Recovery partition என ஒன்று இருக்கும். 


இந்த பார்ட்டிஷனை திறக்க முயற்சிக்கும் பொழுது கீழே திரையில் உள்ளது போல எச்சரிக்கை செய்தி வருவதை கவனித்திருக்கலாம். 


இந்த Recovery Disc அல்லது Recovery partition நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். நமது லேப்டாப்பில் வைரஸ் தாக்குதல், அல்லது வேறு ஏதாவது இயங்குதளத்தை நிறுவலாம் என்ற எண்ணத்தில் முயற்சிக்கும் பொழுது, லேப்டாப்புடன் வந்த இயங்குதளம் மற்றும் டிரைவர்கள், மென்பொருட்கள் ஆகியவை அழிக்கப்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் இந்த வசதியை பயன் படுத்தி நாம் நமது லேப்டாப்பை ஃபேக்டரி Default Settings இற்கு ரீஸ்டோர் செய்துக் கொள்ளும் பொழுது, புதிதாக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது அதில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்கள், டிரைவர்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதம் திரும்ப பெற முடியும்.

இந்த  Recovery Disc அல்லது Recovery partition இல் உள்ள இயங்குதளம் உரிமம் பெற்றது (Licensed OS) என்பதும் இதற்காக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். 

சரி இப்படி Recovery Disc இல்லாத லேப்டாப்பிற்கு அதன் Recovery partition -இல் இருந்து Recovery டிஸ்க் உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் லேப்டாப் வாங்கி குறுகிய காலத்திற்குள்ளாக, அதாவது இந்த Recovery partition சேதம் எதுவும் ஆவதற்கு முன்பாக உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது. இதை HP லேப்டாப்பில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். 

இதை உருவாக்குவதற்கு நம்மிடம் தயாராக இரண்டு DVD + R டிஸ்க்குகள் இருக்கவேண்டும். (ஒரு சில Recovery disc உருவாக்கும் மென்பொருட்கள் DVD-RW, DVD+RW போன்ற டிஸ்க்குகளை ஏற்றுக் கொள்வது இல்லை). மேலும் லேப்டாப் பாட்டரி அளவை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த உருவாக்கத்தின் நேரம் சுமார் ஒரு மணி நேரம் என்பதால்,  இடையில் மின் வெட்டு ஏதும் இல்லாமலிருத்தல் நலம். 

முதலில் உங்கள் லேப்டாப் ஏற்கனவே இயக்கத்தில் இருந்தால் ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இணைய இணைப்பு மற்றும் Wireless ஐ அனைத்து விடுங்கள். இந்த செயல்பாட்டின் போது மற்ற எந்த அப்ளிகேஷனையும் இயக்க வேண்டாம். 

Start பட்டனை க்ளிக் செய்து All Programs சென்று  PC Help & Tools மற்றும்Recovery Disc Creation  ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள். அல்லது ஸ்டார்ட் மெனுவில் சர்ச் பாக்ஸில் Recovery Disc Creation என டைப் செய்து HP Recovery Manager ஐ திறந்து கொள்ளுங்கள். 

Welcome திரையில் Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். Insert Blank Recordable disc திரை வரும் வரை Next பட்டனை க்ளிக் செய்து வாருங்கள். 
இப்பொழுது Blank DVD+R டிஸ்க்கை நுழையுங்கள். இச்சமயத்தில் ஏதேனும் AutoPlay திரை வந்தால் அதனை மூடி விடுங்கள். 

   
Next பட்டனை அழுத்தி பொறுமையாக காத்திருங்கள். 

முதல் DVD உருவான பிறகு தானாகவே eject ஆகிவிடும். இதை எடுத்து முதலில் "Recovery Disc 1 of 2" என எழுதி வைத்துக் கொண்டு, அடுத்த DVD ஐ நுழைத்து Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். 

                   
இந்த பணி முடிந்த பிறகு, இரண்டாவது DVD க்கும் அதே போல பெயர் எழுதி வைத்துக் கொண்டு, Finish பட்டனை க்ளிக் செய்து மூடி விடுங்கள். 

பெரும்பாலான லேப்டாப்களில் இந்த Recovery டிஸ்க் உருவாக்குவது ஒரே ஒருமுறை மட்டும்தான் அனுமதிக்கப் படுகிறது என்பதனால், இந்த செயல்பாட்டின் பொழுது மிகவும் கவனமாக இருப்பதுடன், நல்ல தரமான DVD களை பயன்படுத்துவதும், அவற்றை பத்திரமாக வைத்திருப்பதும் அவசியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.


அவ்வளவுதான். இனி உங்கள் லேப்டாப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, ரீஸ்டோர் செய்ய வேண்டுமெனில் இந்த DVD களின் மூலம் பூட் செய்து சரி செய்ய முடியும். 

பதிவு திருடர்களுக்கு ஓர் அறிவிப்பு:-
எனது கட்டுரைகள் அனைத்தும் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தொடர்ந்து பிரசுரிக்கப் பட்டு வருவதால், நீங்கள் பதிவுகளை திருடும் பொழுது, அந்த பத்திரிக்கையின் காப்புரிமையை மீறுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Gmail Tricks: மின்னஞ்சல்களை கோப்புகளாக சேமித்து வைக்க

வழக்கமாக நமக்கு Gmail லில் வருகின்ற முக்கியமான மின்னஞ்சல்களை, ஆவணப் படுத்துவதற்காக வேர்டு கோப்புகளாக மாற்ற, மின்னஞ்சலில் உள்ள விவரங்களை தேர்வு செய்து, காப்பி செய்து பின்னர் வெற்று வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து சேமித்துக் கொள்வோம். 

இந்த பணியை மேலும் எளிதாக்க வந்துள்ளது Gmail Labs இன் Create a Document வசதி! இதனை நமது Gmail இல் இணைத்து எப்படி பயன் படுத்துவது என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்கள் Gmail கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்து, Settings பக்கத்திற்கு செல்லுங்கள்.


இங்குள்ள வசதிகளில் Labs லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இங்கு Available Labs பட்டியலில் உள்ள ஒவ்வொரு வசதியாக பார்த்து, Create a Document பகுதிக்கு சென்று அதிலுள்ள Enable பொத்தானை அழுத்துங்கள்.


பிறகு அந்த பக்கத்தின் இறுதிக்கு சென்று அங்குள்ள Save changes பொத்தானை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி தேவையான மின்னஞ்சலை திறக்கும் பொழுது, வலது புறத்தில் புதிய மெனு தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.




இதில் Create a Document லிங்கை க்ளிக் செய்தால், அடுத்த டேபில் Google Docs திறக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒரு Google டாக்குமெண்டாக உருவாக்கப்படும்.


அடுத்து மேலே உள்ள File menu விற்கு சென்று, Download as க்ளிக் செய்து,

 


ODT, PDF, RTF, Text, Word, Html என தேவையான கோப்பு வகையை க்ளிக் செய்து தரவிறக்கி வைத்துக் கொள்ளலாம்.